tamil export guide book

tamil export guide book

ஒரு வணிகர் ஏற்றுமதியைத் துவங்குவது எப்படி? என்பதற்கான வழிமுறைகள்
1. முதன் முதலாக ஏற்றுமதி வணிகத்தில் நுழைபவருக்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் வரிசைக் கிரமத்தில் அனுசரிக்கப்பட்டால் முழுவதும் உதவிகரமாக இருக்கும்.
2. சரியான பெயா ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். உதாரணத்திற்கு பெயரில் இண்டர்னேஷனல்’ அல்லது ‘ஓவர்சீஸ்’ இருந்தாலே இது ஒரு ஏற்றுமதி / இறக்குமதி நிறுவனம் என்பது பார்ப்போருக்குத் தெரியும்.
3.பதிவு செய்து கொள்ளுதல். நாட்டின் பதிவுச் சட்டத்தின் கீழ் கம்பெனி முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அது தனியார் தலைமை டைரக்டர் ஒருவரால் நிர்வாகம் செய்யப்பட்டாலும் சரி, கூட்டாளிகள் சிலர் பங்காளிகளாகச் சேர்ந்து செய்தாலும் சரி. முறையாக பதிவு செய்யப்படவேண்டும்.
4. வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அந்த வங்கியில் அயல்நாட்டு பணமாற்றும் சேவை வசதி இருக்க வேண்டும்.

இறக்குமதி செய்யப்படும் சரக்கைச் சோதிப்பது ?

சரக்குகளை சாதாரணமாக கையில் கிடைத்தவாறு எடுத்து, எந்தவித வரிசையையும் அனுசரிக்காமல் (random) ஆக, சோதிப்பது வழக்கம். ஏனென்றால் சரக்கு அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்த்து சோதிப்பது என்பது முடியாத காரியம். எத்தனையோ சமயங்களில், இறக்குமதியாளரிடம் பல விவரங்கள் இல்லாதபொழுது, அவர் சரக்குகளை சுங்க வரியை தீர்மானிக்கும் முன் சோதிக்கச் சொல்வார். இதை முதன் முதல் சோதனை என்பார்கள். இதைமேலேகண்ட ஆவணத்தைப்பூர்த்தி செய்யும் முன் செய்யச்சொல்லுவார் அல்லது கம்ப்யூட்டரில் தகவல் விவரங்களை ஏற்றும் முன் செய்யச் சொல்லுவார்.

சுங்க அதிகாரிகளின் மதிப்பீடு எப்படிச் செய்யப்படுகிறது?

இந்தியத்துறைமுகத்திற்கு ஒரு இறக்குமதி சரக்கு வந்து சேர்ந்தவுடன், முதன்முதலிலசுங்க இலாகாவின் சோதனைகளுக்கு உட்பட்டாக வேண்டும். அங்குதான் சரக்கின் மதிப்பீட்டுப் பணியை அவர்கள் மேற்கொள்ளுவார்கள். சரக்கின் உண்மையான மதிப்பிற்கு உரிய சுங்க வரியை அங்குதான் விதிப்பார்கள்.
இறக்குமதியாளரோ அல்லது அவருடைய ஏஜண்டோ சரக்கை வெளியே எடுக்கும் முன் சுங்கவரியைச் செலுத்தியாக வேண்டும். வரிவிகிதங்கள் என்பது செய்யவேண்டிய கடமைகளின் ஒரு பட்டியலாகும்.
அதுவே விதிக்கப்படும் வரியும் ஆகும். அதன்மதிப்பும் அந்தப்பட்டியலில் அடங்கும். வரி என்ற கணக்கில் எப்பொழுதெல்லாம் இரு நாடுகளை அது கடக்கிறதோ அப்பொழுது விதிக்கப்படுவது ஆகும்.
இறக்குமதி வரிகளோ அல்லது ஏற்றுமதி வரிகளோ, ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வசூலிக்கப்படும். அல்லது குத்துமதிப்பாக அல்லது தோராயமாகவசூலிக்கப்படும். வரிகள் பெரும்பாலும் அந்தந்த பொருட்கள் விற்கப்படும் விலைகளைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படும். ஒரு பொருளுக்கு ஒருமுறை உரிய மதிப்பு
ஒன்று நிர்ணயம் செய்யப்படும்

Tamil Export Book

இந்தியா WTO நிறுவனத்தின் ஒரு அங்கத்தினராதலால் அந்த நிறுவனத்தின் பரிந்துரைகளையே அனுசரித்து பொருட்களின் விலையை நிர்ணயித்து, வரியை மதிப்பீடு செய்கிறது.

அதன் காரனமாக, எந்த இறக்குமதியாளரும் ஒருபொருளை இறக்குமதி செய்யும்பொழுது அதன் சரியான உண்மையான விலையை
B/E ஆவணத்தில் வெளியிட வேண்டும்.

அத்துடன் இன்வாய்ஸின் ஒரு நகலையும் இணைக்க வேண்டும். எல்லா விவரங்களையும் அதற்குரிய படிவத்தில் வெளியிடல் வேண்டும். அப்படிச் செய்தாலே சரியான வரி விகிதங்கள் கணக்கிடப்பட முடியும்.

Showing the single result