Tamil Export Business

Tamil Export Business மதிப்பீட்டு முறைகளும் வழிகளும்
அன்னிய நாட்டிலிருந்து ஒரு பொருளை இறக்குமதியாளர் தருவிக்கும் பொழுது, அதன் உண்மையான மதிப்பை B/E ஆவணத்தில் தெரிவிக்க வேண்டும். அதுவே மதிப்பீடுகளுக்கு உதவும். சுங்க இலாகா பரிவர்த்தனையாகும் பணத்தின் மதிப்பையே வரிகளை தீர்மானிப்பதற்கு ஒரு அடிப்படை என்று எடுத்துக்
கொள்ளும். ஆனால் இன்னமும் சில விதிகளும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அதைத் தீர்மானிக்கும்.
பரிவர்த்தனை மதிப்பு என்பது இறக்குமதியாளர் செலுத்தியதோ அல்லது செலுத்தவேண்டிய விலையே ஆகும்.
அப்படி ஒருவேளைசுங்க அதிகாரிகளுக்கு பொருளினவிலைமீது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் கீழ்க்கண்ட முறைகளில் ஏதாவது ஒன்றை உபயோகித்துச் செய்வார்கள்.

அதே போன்ற பொருட்களின் தெரிந்த விலையோடு ஒப்பிட்டு முடிவுக்கு வருதல், அதே போன்ற பொருட்களின் தெரிந்த விலையோடு ஒப்பிட்டு முடிவுக்கு வருவார்கள்.
மற்ற விலையிலிருந்து கணித வழி முறைகளால் கணிப்பது.

இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலையைப் பொறுத்து. (இறக்குமதி செய்யும் நாட்டில் அது விற்கப்படும் விலை) அல்லது மூலப்பொருட்களின் விலைகளிலிருந்து கம்ப்யூட்டர் மூலம் கணிக்கப்படும் மதிப்பை எடுத்துக்கொள்வார்கள் மற்றும்
அதற்கு உற்பத்தி செய்யும் நாட்டில் இருக்கும் விலையைப் பொறுத்தும், மற்றும் லாபம் இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு கணிப்பார்கள்.

மேற்கண்டமுறைகளோடு சற்று நெளிவு சுழிவானவழியில் விலையை நிர்ணயித்துக்கொள்வார்கள். விலையின் எந்தெந்த அங்கங்கள் வரிக்கு உட்படுத்தப்படும் என்பதைப் பார்க்கலாம்.

ஒரு அங்கம் வரிக்கு உட்படுத்தப்படுபவை. மற்றொரு அங்கம் வரிக்கு உட்படுத்தப்படாதவை.

வரிக்கு உட்படுபவை எல்லாம், கமிஷன்கள், ப்ரோக்கருக்குக் கொடுக்கும் பணம், கன்டைனரின் விலை மற்றும் பேக் செய்வதற்கு உரிய கட்டணங்கள்.

இலவசமாகச் செய்யப்ப்பட்ட அனேக சேவைகள் அதுவும் மிகவும் குறைந்த விலையில் செய்யப்பட்ட சேவைகள், போன்ற சில மொத்த விலையிலேயே சேராதவை.

Tamil Export Business

இவை எல்லாமே வரிவிதிப்பிற்காக எடுத்துக் கொள்ளப்படும். உதாரணத்திற்கு, சரக்கின் மூலப் பொருள், சரக்கின் சில்லரை அங்கங்கள், ஆயுதங்கள், அச்சுக்கள், சாமான்கள் விற்றபிறகு கொடுக்கப் படவேண்டிய ராயலடி தொகை, முன்பணமாகக் கொடுக்கப்படவேண்டியவை.

இறக்குமதி செய்யும் இடம் வரையில்லாரியில் எடுத்துச்செல்ல சார்ஜுகள், வாரியில் ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் உரிய கட்டணங்கள் மற்றும் காப்பீட்டுச் செலவுகள்.

இரண்டாவது வகை. வரி விதிக்கப்பட முடியாத அங்கமாகும். காலம் தாழ்த்தி செலுத்தப்படும் பணத்திற்கு உண்டாள வட்டி, இறக்குமதி ஆனபின் ஆகும் செலவுகள்,

உள்நாட்டில் சாமான்களை எடுத்துச் செல்வதற்கு உரிய சார்ஜுகள், இயந்திரமாக இருந்தால், அதை நிறுவும் கட்டணங்கள் மற்றும் இயந்திரத்தை முடுக்கி  வைப்பதற்கு உண்டான கட்டணங்கள் போன்றவற்றிற்கு வரி விதிக்க முடியாது.

சுங்க வரிகளில் பல வகை உண்டு

The customs Tariff Act, 1975, சுங்க வரிகளை விவரமாக வர்ணிக்கிறது. அவ்வகைகள் கீழே தரப்பட்டிருக்கின்றன.

அடிப்படைச்சுங்க வரி

மேற்படி சட்டத்தின் செக்ஷன் 14(1)ன்படி தீர்மானிக்கப்பட்ட மதிப்பின் ஒரு சதவீதமே சங்க வரியாக விதிக்கப்படும்.  இது 5 லிருந்து 30 சதவீதம் வரை இருக்கும். பொருட்களை வைத்து இந்த சதவீதம் வேறுபடும்.

2004 ம் வருடம் ஜூலை மாதம் 9-ந் தேதியிலிருந்து, கல்வி சார்ந்த செஸ் ஒன்றை அரசாங்கம் இறக்குமதி சரக்குகளின் மீது விதித்திருக்கிறது. இது மொத்த சுங்க வரியில் 2 சதவீத விகிதத்தில்.

சங்கவரி கூடுதலாக வசூலிக்கப்படும் சூழல்
இதை கௌன்டர்வெயிலிங் வரி என்றும் கூறுவர். இதை எதிர் ஈடு செய்யும் என்ற பொருளில் சொல்லுகிறார்கள்.

இந்த வரியானது அதே மாதிரியான இன்னொரு பொருளுக்கு உரிய (இந்தியாவில்
உற்பத்தி செய்யப்பட்டது) கலால் வரிக்குச் சமமானது.

அப்படி அதே போன்ற பொருள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை என்றால், அதன் மீது ஒரு வேளை இந்தியாவில் அது உற்பத்தியாகி இருந்தால்
விதிக்கப்படும் கலால் வரியே அடிப்படையாகி விடும்.

CVDஎன்பது பொருளின் மதிப்பையும் அடிப்படையான சுங்க வரியையும் கூட்டி வரும் தொகை. மேலே சொன்ன சட்டத்தின்படியே, ஒரு சிறப்பான கூடுதல் வரியும்
விதிக்கப்படும். இதை SAD என்று சொல்லுவர்.

உதாரணம். ஒரு இறக்குமதியாளர், ரூ.1 லட்சம் பெறுமான பொருள் ஒன்றை இந்தியாவிற்குள் தருவிக்கிறார் என்றுவைத்துக்கொள்வோம். அதன்மீது விதிக்கப்படும் பல்வேறு அங்கங்களான சுங்கவரியை இப்பொழுது பார்ப்போம்.

Export import books tamil free download

Tamil Export Book

Tamil Export Business