free export training in tamil

free export training in tamil

free export training in tamil ஏற்றுமதி செய்யும் முன்னர் – ஒரு சுயபரிசோதனை:
1. நீங்கள் ஏற்றுமதி செய்ய உள்ள பொருட்களை பற்றிய அத்தியாவசிய தகவல்கள் (A TO Z) அனைத்தும் தங்களுக்கு தெரியுமா? ஆம் / இல்லை
2. அப்பொருளின் விலை மலிவாக கிடைக்க கூடிய காலங்கள் / பகுதிகள் / பாதுகாக்கும் முறைகள் பற்றி அறிந்துள்ளீர்களா? ஆம் / இல்லை
3. தாங்கள் ஏற்றுமதி செய்ய உள்ள பொருளின் HS CODE ( Harmonized System Code) மற்றும் அரசின் ஏற்றுமதி கொள்கைகள் பற்றி தெரியுமா? ஆம் / இல்லை
4. பொருட்கள் ஏற்றுமதி செய்ய உள்ள நாட்டினை தேர்ந்தெடுத்து விட்டீர்களா? ஆம் / இல்லை
5. தாங்கள் ஏற்றுமதி செய்ய உள்ள நாட்டில், தங்களது பொருளுக்கு ஏதாவது தடை / தர கட்டுப்பாடுகள் உள்ளனவா? ஆம் / இல்லை
6. தாங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் நாட்டின் அரசியல் / பொருளாதார சூழல்கள் / சமூக பழக்க வழக்கங்கள் / வியாபார நடைமுறைகளை அறிந்துள்ளீர்களா? ஆம் / இல்லை
7. தாங்கள் ஏற்றுமதி செய்ய உள்ள நாடு FMS (FOCUS MARKET SCHEME) என்ற ஊக்கத்தொகை பெற வாய்ப்புள்ள நாடா? ஆம் / இல்லை
8. அந்த நாட்டில் தற்பொழுது தங்கள் பொருளுக்குரிய சந்தை விலை எவ்வளவு என்று தெரியுமா? ஆம் / இல்லை.
9. தாங்கள் ஏற்றுமதி செய்ய உள்ள பொருளுக்கு DUTY DRAWBACK / VKGUY(VISHESH KRISHI AND GRAM UDYOG YOJANA)/ FPS(FOCUS PRODUCT SCHEME) போன்ற திட்டங்கள் அடிப்படையில் ஊக்கத்தொகைகள் உள்ளதா? ஆம் / இல்லை
10. தங்கள் பொருட்களின் தரகட்டுப்பாடு அளவுகள் / கிரேடு / பேக்கிங் முறை முதலியன தெரியுமா? ஆம் / இல்லை
11. தங்கள் பொருளுக்கு FOB(Free On Board)/CNF(Cost & Freight)/CIF(Cost, Insurance and Freight) விலை நிர்ணயம் செய்து விட்டீர்களா? ஆம் / இல்லை
12. ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு பணம் பெறும் முறையினை தேர்வு செய்து விட்டீர்களா? ஆம் / இல்லை
13. குறைந்த பட்ச ஏற்றுமதி ஆர்டர் அளவு என்ன என்பது தெரியுமா? ஆம் / இல்லை
14. ஆர்டர் வழங்கப்பட்டால் எத்தனை நாட்களுக்குள் கப்பலில் ஏற்றமுடியும் என்பது தெரியுமா? ஆம் / இல்லை
free export training in tamil
15. தாங்கள் எந்த துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்ய போகிறீர்கள் என்று முடிவு செய்து விட்டீர்களா? ஆம் / இல்லை
16. குறிப்பிட்ட அந்த துறைமுகத்தில் முதல் முறை மட்டும் ஏற்றுமதி செய்ய ஆரம்பிக்கும் முன் AD CODE(AUTHORISED DEALER CODE) பதிவு செய்து விட்டீர்களா ? ஆம் / இல்லை
17.Custom House Agents/Clearing and Forwarding Agents ஐ தேர்வு செய்துவிட்டீர்களா? அவர்களின் சேவைக்கான கட்டணங்கள் எவ்வுளவு என்று தெரியுமா? ஆம் / இல்லை
18. ஏற்றுமதி செய்ய உள்ள நாட்டிற்கான கப்பல் / விமான காப்பீட்டு கட்டணம், பொருளுக்கான காப்பீட்டு கட்டணம் எவ்வுளவு என்று தெரியுமா? ஆம் / இல்லை
19. ஏற்றுமதிக்கு சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் அதற்கு ஆகும் காலம் மற்றும் செலவுகள் பற்றி தெரியுமா? ஆம் / இல்லை
20. உங்கள் வங்கியானது பணத்தை பெற்றுத்தர உங்களிடம் பெறும் சேவைக்கான கட்டணங்கள் எவ்வுளவு என்று தெரியுமா? ஆம் / இல்லை
21. நீங்கள் ஏற்றுமதி செய்ய உள்ள பொருட்களை வாங்கும் இறக்குமதியாளர்களை பற்றிய விபரங்கள் உங்களிடம் உள்ளதா? ஆம் / இல்லை
22. உங்கள் பொருளுக்கு இறக்குமதி செய்யும் நாட்டில் ஏதேனும் இறக்குமதி வரி செலுத்தவேண்டுமா ? ஆம் எனில் எவ்வுளவு? ஆம் / இல்லை
23. நம் நாட்டிற்கும் இறக்குமதி செய்யும் நாட்டிற்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free trade agreement (FTA))உள்ளதா? ஆம் / இல்லை
24. நீங்கள் ஏற்றுமதி செய்ய உள்ள பொருட்களின் போட்டியாளர்கள் யார் யார்? அவர்களின் விலை, தரம், அளவு, பேக்கிங் பற்றிய விபரங்கள் தெரியுமா? ஆம் / இல்லை
25. தங்கள் நிறுவனத்தை பற்றிய விபர கையேடு உள்ளதா? ஆம் / இல்லை
26. தங்கள் நிறுவனத்திற்கு நிறுவனத்தின் பெயரில் மின்னஞ்சல் மற்றும் வெப்சைட் முகவரி உள்ளதா?வெப்சைட்டில் உங்களுடைய ஏற்றுமதி பொருளின் முழு தகவல்களும் படத்துடன் தனியாக இடம்பெற்றுள்ளதா ? ஆம் / இல்லை

Export import books tamil free download

Tamil Export Book

மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் தெரிந்தால் மட்டும் தாங்கள் அந்த பொருளை ஏற்றுமதி செய்ய முயற்சிக்கவும் .இல்லையென்றால் தெரிந்துகொண்டு பின்னர் முயற்சிக்கவும்