பொதுவாக ஏற்றுமதி தொழில் செய்ய விரும்புவர்கள் கீழ்காணும் அனைத்திலும் ஏமாற்றப்பட வாய்ப்புண்டு 

1 )IE Code : export-cheater-careful

IE Code  வாங்குவது மிக மிக எளிது Voter Card , PAN Card வாங்குவதை விட எளிது. நான் வாங்கித்தருகிறேன் இவ்வளவு செலவு ஆகும் என்று ஒரு தொகையை கேட்டால் எவரேனும் கேட்டால் கொடுத்து விட்டு ஏமாற வேண்டாம்

2 ) Company Registration :

நாம் தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனத்தினை பதிவு செய்து தருவதாக கூறி பணத்தினை ஏமாற்றலாம் . அந்தந்த மாவட்டத்தின் தொழில் மையத்தினை   அணுகினாலே  அனைத்து விவரங்களும் கிடைக்கும் .export  Cheater careful

3 ) இறக்குமதியாளர் Database : B2B sites

பொதுவாக Online என்றாலே 90% Fraud தான் .

IE Code வாங்கிய அனைத்து நண்பர்களும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இந்த இடத்தில் . ஏனெனில் இந்த மாதிரியான தளங்களில் பதிவு செய்தவுடன் இறக்குமதியாளர்கள் தகவல்களை கொடுத்து விடுவோம் என்பர் . பதிவு செய்த பிறகு பதிவிற்கு மட்டுமே செலுத்திய பணம் செலுபடியாகும், தகவல்களை பெற தனியாக அதற்கென்று செலுத்த வேண்டும் என்பர்.   அதுமட்டுமல்லாது பதிவு தொகையே 20000 முதல் 40000 வரை இருக்கும். export  Cheater careful

4  ) Supplier :

பொருட்களை எப்போதுமே நேரில் சென்று பொருள் உடைமையாளரை அணுகி வியபாரம் செய்யுங்கள் , முடிந்த அளவு தொலைப்பேசி வழியான வணிகம் வேண்டாம்.


இறக்குமதியாளர்களிடமிருந்து ஏற்படும் சவால்கள் :

1) புதியதாக ஏற்றுமதி செய்யக்கூடிய ஏற்றுமதியாளர்கள் ஆர்வத்தில் இறக்குமதியாளர் கிடைத்தவுடன் பொருட்களை அனுப்பிவிடுவர் . இது தவறான செயல். ஏனெனில் ஒரு இறக்குமதியாளர் நல்லவரா , நம்பகத்தன்மையானவரா என்பதை முதலில் அறிய வேண்டும் .

2) இறக்குமதியாளரின் நிறுவனம் உண்மையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதா? அந்நிறுவனத்தின் மீதான ஏதேனும் தவறுகள் உள்ளதா என்பதை அறிய வேண்டும் .

3) ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது மிகவும் கவனமாக இறுத்தல் வேண்டும்

4) சில இறக்குமதியாளர்கள் சாம்பில் பெறுவதையே வழக்கமாக வைத்திருப்பர் .