Export Business in Tamil Nadu

Export Business in Tamil Nadu ஏற்றுமதியாளர் கடமைகள்
*ஏற்றுமதியாளர் சரக்குப் போக்குவரத்து கட்டணத்தையும், காப்பீட்டு பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.

*ஒப்பந்தத்தில் எந்த இடத்தில் சரக்கு டெலிவரி செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடப்படாவிட்டால் விற்பனையாளர்தன் விருப்பப்படி ஒருதகுந்த இடத்தைத் தேர்ந்தேடுத்துக்கொண்டு அங்கு சென்று சரக்கை டெலிவரி செய்யலாம்.

* சரக்கு எங்கு சென்று டெலிவரி செய்யப்படும் என்பதை வாங்குபவருக்கு தெரிவிக்க வேண்டும்.

*முறையாக டெலிவரி செய்யப்பட்டு விட்டது என்றால் விற்பனையாளர் போக்குவரத்தைக் குறிக்கும் தன் ஆவணத்தைக் கொடுக்க வேண்டியதில்லை.

*வேறு வகையில் ஒப்பந்தங்கள் இருந்தாலொழிய, வாங்குபவரே சரக்கைக் கப்பலில் ஏற்றுவதற்கு முன் நடக்கும் சோதனைகளுக்கு உரிய செலவுகளை ஏற்க வேண்டும். இதில் ஏற்றுமதியாளரின் நாட்டு அரசாங்கம் சட்டப்படி விதிக்கும் சோதனைகளும் அடங்கும்.

சரக்கை கட்டணம் இல்லாமல் அனுப்புதல்

‘Free Carrier’ (FCA) என்று எழுதப் பட்டிருந்தால், விற்பனையாளர் வாங்குபவருக்கு உரித்ததாக தன் கடமைகள் யாவற்றையும் செய்து முடிக்கிறார். வாங்குபவர் பெயர் சொல்லக் கூடிய கப்பலிடம் அவர் எல்லா சரக்குகளையும் ஒப்படைக்கும் பொழுது இது செய்யப்பட்டு முடிந்து விடுகிறது. சரக்கு வாங்குபவர் சொல்லும்
துறைமுகத்திற்கு / விமானதளத்திற்குப் போய்ச் சேரும்.

Export Business in Tamil Nadu

சட்டரீதியான பொறுப்புக்கள்

*அனுப்பவேண்டிய கப்பலுடன்வைத்துக்கொள்ள வேண்டிய ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் ஏற்றுமதியாளருக்கு எந்தவித கடமையும் கிடையாது. விற்பனை ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிபந்தனைகளின் பிரகாரம் வாங்குபவர் சரக்கை டெலிவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*இறக்குமதியாளர் பெயா சொல்லி நியமிக்கும் ஏஜண்டிடம் சரக்கை ஒப்புவிக்க வேண்டும்.பின்னவர் அதைக் கொ ண்டு செல்வார்.

1.அது ரயிலில் போகக் கூடிய சரக்கு என்றால், ரயில்வே நிர்வாகம். சரக்கு ஏற்றப்பட்ட வாகனை நகர்த்தி எடுத்துக் கொண்டு சென்று சரக்கு டெலிவரி செய்யப்படும். அது ரயில் வேயாக இருக்கலாம் அல்லது அதன் சார்பாக பணியாற்றும் இன்னொரு நிர்வாகமாக இருக்கலாம்.

2. சரக்கு ஒருவேளை சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்படுவதாக இருந்தால், ஏற்றுமதியாளரின் இடத்திலேயே அது ஏற்றப்படுவதுடன் டெலிவரி செய்யப்பட்டு விட்டதாகக் கருதப்படும்.

எப்பொழுது இறக்குமதியாளரின் இடத்தில் அது இறக்கப் படுகிறதோ அப்பொழுது டெலிவரி முழுக்க முழுக்க ஆகி விட்டது என்று அர்த்தம். அதாவது சரக்கு இறுதி கட்டமாக இறக்குமதியாளரின் வாகனத்தில் ஏற்றப்பட்டவுடன், டெலிவரி முழுமையாக நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

3. போக்குவரத்து, உள்நாட்டு நீர் வழியாக இருந்தால், ஏற்றுமதியாளர் தமது துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றும் பொழுது, டெலிவர் முழுமையாக நிறைவேறி விட்டது என்று அர்த்தம்.

அதாவது சரக்கு இறுதி கட்டமாக இறக்குமதியாளரின் வாகனத்தில் ஏற்றப்பட்டவுடன், டெலிவரி முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டது என்று அர்த்தம்.

4.கடல் வழியாக சரக்கு போக்குவரத்து என்று இருந்தும், சரக்கு ஒரு முழு கன்டைனர் அளவும் இருந்தால், (FCL) ஏற்றுமதியாளரின் பொறுப்பு முழுவதுமாக நிறைவேற்றப்பட்டு விட்டது என்று அர்த்தம்.

அதாவது சட்ட பூர்வமாக அவருடைய பொறுப்பு நிறைவேற்றப்பட்டு விட்டது என்று
அர்த்தம்.

அதாவது சரக்கு ஏற்றி வைக்கப்பட்ட கன்டைனர் எப்பொழுது பயணிக்கப் போகும் கப்பலில் ஏற்றி வைத்தவுடன் அவருடைய பொறுப்பு நிறை வேற்றப்பட்டு விட்டது என்று அர்த்தம்.

எப்பொழுது சரக்கு ஒரு முழு கன்டைனருக்கு உரிய எடையாக அல்லாமல், குறைவாக
இருக்கிறதோ. (LCL) அல்லது ஒருகன்டைனரில் போடப்படாமல் இருக்கிறதோ, விற்பனையாளரே சரக்கை வாகனம் புறப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

கப்பலில் சரக்கை கொடுத்தவுடன், டெலிவரி முழுக்க முடிந்து விட்டதாகக் கருதப்படும். அல்லது கப்பல உரிமையாளரின் சார்பாக பணி செய்பவரிடம் கொடுத்தவுடன் டெலிவரி முழுக்க முடிந்து விட்டதாகக்கருதப்படும்.

5.விமான சாவீஸாக இருந்தால், விமான அதிகாரிகளிடம் சரக்கு கொடுக்கப்பட்டவுடன், டெலிவரி முடிந்து விட்டதாகக் கருதப்படும். அல்லது அவருடைய அங்கீகாரம் பெற்று அவருக்காக பணிபுரியும் ஒருவரிடம் கொடுக்கப்பட்டவுடன், டெலிவரி முடிந்து விட்டதாகக் கருதப்படும்.

Export Business in Tamil Nadu

ஏற்றுமதியாளரே நஷ்டம், சேதம் இவற்றினால் வரும் விளைவுகளுக்கு உண்டான நஷ்ட ஈடுகளைப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். அவை முறையாக உரிய இறக்குமதியாளருக்குக் கொடுக்கப்படும் வரையில் அந்த நஷ்டங்களை அவரே பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

இறக்குமதியாளர் போதிய கால அவகாசம் கொடுத்து வெகுநாட்களுக்கு முன்பே சரக்கை ஏந்திச் செல்லும் கப்பலைப்பற்றிய விவரங்களைக்கொடுக்கிறார். எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் என்னவகையான. வாகனத்தில் அனுப்பப்படும் என்பதையும் தெரிவிக்கிறார். எவ்வளவு நாளுக்குள் டெலிவரி செய்யப்படும் என்பதையும் எந்த தேதியில் டெலிவரி செய்யப்படும் என்பதையும் தெரிவிக்கிறார்.

ஒரு சில சமயங்களில், குறிப்பிட்ட இடத்தில் எந்த குறிப்பான இடத்தில் சரக்குகள் கப்பலுக்குள் ஏற்றப் படவேண்டும் என்பதையும் தெரிவிக்கிறார்.
சொல்லப்பட்டவைகளுக்கு எதிர்மறையாகஎது ஒன்றும் சொல்லப்படாத வரையில் இறக்குமதியாளரே கப்பலில் ஏற்றும் முன் சரக்குகள் சோதனையிடும் செலவினங்களுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இது இறக்குமதி செய்யும் நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஒப்ப இருந்தாலொழிய அந்த செலவினங்களுக்கு
இறக்குமதியாளரே ஒப்புக் கொள்ள வேண்டும்.

Export import books tamil free download

Tamil Export Book

 

Free Alongside Ship

ஏற்றுமதி செய்யப்படும் இடத்தில் கப்பலுக்கு அருகிலேயே சரக்குகள் வைத்து ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் நடக்கும்பொழுது இந்த சொல்லை உபயோகிக்கிறார்கள். கப்பலுக்கு அருகே’ என்பது இதன் அர்த்தம்.

கடல் வழிகளுக்கோ அல்லது உள்நாட்டு நதி நீர் வழிகளுக்கோதான் இந்த சொல் உபயோகப்படுத்தப்படும்

Export Business in Tamil Nadu